என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர்
நீங்கள் தேடியது "வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர்"
இந்திய மண்ணில் ஆடுவது மிகப்பெரிய சவால் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா கூறியுள்ளார். #WestIndies #StuartLaw #India
ராஜ்கோட்:
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இதையொட்டி வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்தியா உலகின் ‘நம்பர் ஒன்’ அணியாக விளங்குகிறது. நாங்கள் தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கிறோம். இந்திய அணியை அவர்களது சொந்த மண்ணில் எதிர்கொள்வது மிகப்பெரிய சவாலாகும். இந்தியாவுக்கு வரும் பெரும்பாலான அணிகள் வெற்றி பெறுவதில்லை. அதை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். ஆனால் நாங்கள் வேகமாக முன்னேற்றம் கண்டு வரும் ஒரு அணியாகும்.
இந்தியாவுக்கு வருவதற்கு முன்பாக துபாயில் 8 நாட்கள் தங்கியிருந்தோம். அங்கு 45 டிகிரி செல்சியஸ் வெயில் கொளுத்தியது. அதனால் இங்கு (ராஜ்கோட்) வெயில் தாக்கம் எங்களுக்கு ஒரு பிரச்சினை அல்ல. இந்திய தொடர் குறித்து நிறைய பேசி விட்டோம். இனி பேசுவதை நிறுத்தி விட்டு, வீரர்கள் களத்தில் தங்களது திறமையை காட்ட வேண்டிய நேரம் இது.
இவ்வாறு ஸ்டீவர்ட் லா கூறினார்.
இதற்கிடையே தனது பாட்டி இறந்ததால் தாயகம் திரும்பிய வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் கெமார் ரோச் முதலாவது டெஸ்டில் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது டெஸ்ட் தொடங்கிய பிறகே அவர் மீண்டும் அணியுடன் இணைவார் என்பது தெரியவந்துள்ளது. #WestIndies #StuartLaw #India

×

X